பவதாரிணி நினைவாக பெண்கள் ஆர்கெஸ்ட்ரா — இளையராஜா அறிவிப்பு
மறைந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் இறந்து விட்டார். அவரது மறைவுக்குப் பிறகு நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், மகள் பெயரில் ஒரு ஆர்கெஸ்ட்ரா அமைக்க விரும்புவதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.
தற்போது, அந்த முயற்சிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இளையராஜா தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஆர்கெஸ்ட்ராவில் இணையத் திறமை மற்றும் ஆர்வம் உள்ளவர்களை விண்ணப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரது பதிவில்,
“என் மகள் பவதாரிணியின் நினைவாக ‘பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா’வை தொடங்க விரும்புகிறேன். திறமையான பெண் பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் தங்களின் விவரங்களை allgirlsorchestra@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.”
என்று கூறியுள்ளார்.