காதலியுடன் நிச்சயதார்த்தம் செய்தார் நடிகர் அல்லு சிரிஷ் – திருமணம் விரைவில்
தமிழில் ராதா மோகன் இயக்கிய ‘பயணம்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் அல்லு சிரிஷ், பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் மகனும், நடிகர் அல்லு அர்ஜுனின் சகோதரருமாவார். அவர் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சிலநாள் காதலித்து வந்த ஐதராபாத் தொழிலதிபரின் மகள் நைனிகாவுடன் அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்நிகழ்ச்சி ஐதராபாத்தில் நெருக்கமான குடும்பத்தினரின் முன்னிலையில் நடந்தது.
இந்த விழாவில் சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் புகைப்படங்களை அல்லு சிரிஷ் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்.