“கூட்ட நெரிசல் காரணமாக ரசிகர்களை சந்திக்க முடியவில்லை” — ஷாருக்கான் மன்னிப்பு
தனது 60வது பிறந்தநாளில் ரசிகர்களை நேரில் சந்திக்க முடியாததற்காக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மன்னிப்புக் கோரியுள்ளார்.
முதலும், உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களும் பிரபலங்களும் ஷாருக்கானுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர் ஒவ்வொரு ஆண்டும் போல் மும்பையின் ‘மன்னத்’ இல்லத்தின் முன்பு கூடியிருந்த ரசிகர்களை இந்த ஆண்டு சந்திக்கவில்லை.
பிறந்தநாளன்று ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு கைஅசைத்து வாழ்த்து தெரிவிப்பது ஷாருக்கானின் வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் கட்டுப்பாட்டு காரணங்களால் அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.
இதனைப் பற்றி ஷாருக் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பதிவில்,
“வெளியே வந்து உங்களை வரவேற்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக மனதார மன்னிப்பு. அனைவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உங்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். மிகவும் நேசிக்கிறேன்”
என்று கூறினார்.