சமூக ஊடகங்களில் பெரிய வரவேற்பை பெற்றுள்ள ‘ஆஃப்ரோ தபாங்’ பாடல் தற்போது இணையத்தை கலக்கும் நிலையில் உள்ளது.
சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘45 தி மூவி’ படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் வேகமாக வைரலாகி வருகிறது.
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில், சுரஜ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய செலவில் தயாரித்து வரும் இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சின்ன சின்ன க்ளிம்ப்ஸ் முன்னதாகவே வெளியாகி ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. அதன் தொடர்ச்சியாக, தற்போது ‘ஆஃப்ரோ தபாங்’ பாடல் வெளிவந்து கவனம் ஈர்த்துள்ளது.
இந்த பாடலை கானா காதர் தமிழில் எழுதி பாடியுள்ளார்; இசையமைப்பை அர்ஜுன் ஜன்யா செய்துள்ளார். ஜானி நடன வடிவமைப்பில், ஆப்பிரிக்க நடன கலைஞர்கள் இதில் கலக்கி உள்ளனர்.
வெளியான ஒரே நாளில் இப்பாடல் தமிழில் 7 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. அதேசமயம் கன்னடத்தில் 40 லட்சத்துக்கும் மேல் பார்வைகள் பெற்று சூப்பராக டிரெண்டாகியுள்ளது.
‘45 தி மூவி’ திரைப்படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்கிறது.