‘ஜுகாரி கிராஸ்’ நாவல் திரைப்படமாகிறது — நாயகனாக ராஜ் பி. ஷெட்டி
பிரபல எழுத்தாளர் பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் புகழ்பெற்ற நாவல் ‘ஜுகாரி கிராஸ்’, அதே பெயரில் திரைப்படமாக உருவாகிறது.
இந்தப் படத்தை குருதத்த கனிகா இயக்கவுள்ளார். இதில் ராஜ் பி. ஷெட்டி நாயகனாக நடிக்கிறார்.
இந்நாவல் அடிப்படையிலான படத்தின் அறிமுக டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மொட்டையடித்த தலை, குருதியின் தெறிப்புகள், சிவப்பு ரத்தினக் கற்கள் என சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்ட காட்சிகள் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளன.
இயக்குநர் குருதத்த கனிகா மற்றும் ராஜ் பி. ஷெட்டி இருவரும் முன்பு ‘கரவளி’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியவர்கள். அந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
‘ஜுகாரி கிராஸ்’ திரைப்படத்தின் தயாரிப்பை குருதத்த கனிகா பிலிம்ஸ் நிறுவனம் மேற்கொள்கிறது.
இதில் அபிமன்யு சாதானந்தன் ஒளிப்பதிவாளராகவும், சச்சின் பஸ்ரூர் இசையமைப்பாளராகவும் இணைந்துள்ளனர்.
ராஜ் பி. ஷெட்டியுடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களைத் தேர்வு செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.