திருமலை ஏழுமலையானை தரிசித்த இஸ்ரோ தலைவர்
இன்று மாலை 5.26 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்3-எம்5 ராக்கெட் மூலம் CMS-03 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்த ஏவுதலை முன்னிட்டு, இஸ்ரோ தலைவர் எஸ். நாராயணன் உட்பட விஞ்ஞானிகள் குழு நேற்று திருமலை திருத்தலத்துக்கு வந்து, விஐபி தரிசனத்தில் பங்கேற்றனர். அவர்கள், விண்கலத்தின் மாதிரி மாடலை ஏழுமலையான் பாதத்தில் வைத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:
“CMS-03 செயற்கைக்கோள் தகவல் தொடர்புத் துறையில் முக்கிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 4,410 கிலோ எடையுடையது. இந்தியாவில் இருந்து இதுவரை ஏவப்பட்ட செயற்கைக்கோள்களில் மிக அதிக எடையுடையது இதுவே.”