மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 இந்தியர்கள் பலி
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் ஏற்பட்ட படகு விபத்தில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
மொசாம்பிக் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள பெய்ரா துறைமுகத்திலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு காலை ஒரு படகு புறப்பட்டது. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கப்பலுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் போது, அந்தப் படகு திடீரென கடலில் கவிழ்ந்தது.
அதில் இருந்த ஒன்பது பேர் கடலில் மூழ்கினர். அவர்களில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள ஆறு பேரும் மீட்கப்பட்டனர், அதில் ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தை மொசாம்பிக்கில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது.