போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ மகனுக்கு வாய்ப்பு!
கால்பந்து லெஜண்ட் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் கிறிஸ்டியானோ டாஸ் சான்டோ (கிறிஸ்டியானின்ஹோ) போர்ச்சுகல் 16 வயதுக்குட்பட்டோர் தேசிய அணியில் இடம் பெற்றார். பல ஆண்டுகளாக கால்பந்து பயிற்சி பெற்று வந்த அவர், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறந்து விளையாடி வந்தார்.
அதன் தொடர்ச்சியாக, துருக்கியின் அன்டால்யாவில் நடைபெற்ற பெடரேஷன்ஸ் கோப்பை போட்டியில் போர்ச்சுகல் U-16 அணிக்காக அறிமுகமானார். இந்த போட்டியில் போர்ச்சுகல் அணி துருக்கியை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.