நடிகர் ஆரவ் தயாரிப்பாளரானார்
பிக் பாஸ் பட்டம் பெற்றதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான ஆரவ், ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ‘ராஜபீமா’, ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ படங்களில் நடித்தார். மேலும் மகிழ் திருமேனி இயக்கிய, உதயநிதி நடிப்பில் வெளியான ‘கலகத்தலைவன்’ படத்தில் வில்லனாக திகழ்ந்து கவனம் பெற்றார். அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்திலும் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இப்போது நடிகராக மட்டும் அல்ல, தயாரிப்பாளராகவும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து ஆரவ் கூறியதாவது:
“பெரும் ரசிகர்கள் அன்பும், பல ஆண்டுகளாக கிடைத்த அங்கீகாரமும் என்னை ஊக்குவித்தது. இந்த அற்புதமான திரைப்பட உலகின் ஒரு பகுதியாக மாற உதவியது.
இந்த அனுபவத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில், எனது தயாரிப்பு நிறுவனமான ‘ஆரவ் ஸ்டூடியோஸ்’ தொடங்கியுள்ளேன். இது கதை சொல்லும் கலையின் மீதான என் ஆழமான காதலின் விளைவு.
சினிமாவில் இன்னும் சொல்லப்படாத உண்மையான கதைகளை காட்சிப்படுத்தும் முயற்சியாக இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. மனங்களை தொடும் தரமான படங்களை வழங்குவோம் என்ற நம்பிக்கையுடன் நன்றி மனப்பான்மையோடு இந்த புதிய சினிமா பயணத்தைத் தொடங்குகிறோம்,” என்று ஆரவ் தெரிவித்துள்ளார்