ஆடிஷனில் மிளிர்ந்த புதிய ஹீரோ – இயக்குநர் பாராட்டு
ஆதித்யா மாதவன், கவுரி ஜி கிஷன், அஞ்சு குரியன், முனிஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாலா பார்வதி, ஜகன், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘அதர்ஸ்’. மெடிக்கல் குற்றத் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இந்த படத்தை அபின் ஹரிஹரன் இயக்கியுள்ளார்.
கிராண்டு பிக்சர்ஸ் முரளி தயாரிப்பில், கார்த்திக் ஜி இணைத் தயாரிப்பாளராக இணைந்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
படத்தைப் பற்றி இயக்குநர் அபின் ஹரிஹரன் கூறியதாவது:
“ஒரு வருட பாடுபாட்டின் பின் ‘அதர்ஸ்’ படம் உருவானது. இந்தக் கதைக்கேற்ற புதிய ஹீரோவை தேடியதால் ஆடிஷன் நடத்தினோம். அப்போது ஆதித்யா மாதவன் தேர்வானார். அவர் கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும், தமிழை கற்றுக்கொண்டு நன்றாக நடித்தார். ஆடிஷனிலேயே அவரது திறமை தெரிந்தது. அவர் மிகவும் உழைப்பாளி.
கவுரி, அஞ்சு குரியன், ஹரீஷ் பேரடி போன்ற அனுபவசாலிகள் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படம் பார்வையாளர்களுக்கு தனித்துவமான அனுபவமாக இருக்கும்,” என்றார்.