ஹீரோவாக லோகேஷ் கனகராஜ்: ‘டிசி’ படத்தின் டீசர் வெளியீடு
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நாயகனாக நடிக்கும் ‘டிசி’ படத்தின் அறிவிப்பு டீசர் வெளிவந்துள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில், லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகிறார். சில நாட்களுக்கு முன் பூஜையுடன் ஆரம்பித்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில், பாலிவுட் நடிகை வாமிகா கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது அவர் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
வெளியான டீசரில் ரத்தக் கறை படிந்த முகத்துடன் லோகேஷ் தீவிரமான தோற்றத்தில் தோன்றுகிறார். வாமிகாவும் காட்சிகளில் இடம் பெற்றுள்ளார். லோகேஷ் ‘தேவதாஸ்’, வாமிகா ‘சந்திரா’ எனும் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். டீசர் வெளியானது சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘டிசி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்கமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டதால், அவரது அடுத்த இயக்க படத்தின் ஹீரோ யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.