“நக்சல் அச்சு மண்டலமாக இருந்த சத்தீஸ்கர், இன்று முன்னேற்றத்தின் வடிவம்” – பிரதமர் மோடி
ஒருகாலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலால் களங்கம் பெற்ற மாநிலமாக இருந்த சத்தீஸ்கர், இன்று முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பின் சின்னமாக மாறியுள்ளது என்பதை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
சத்தீஸ்கர் புதிய சட்டமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:
“சட்டமன்றம் என்பது சட்டங்களை உருவாக்கும் இடம் மட்டுமல்ல; மாநிலத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சுறுசுறுப்பான மையம். இங்கிருந்து வெளிப்படும் ஒவ்வொரு கருத்தும் சேவை நோக்கும் வளர்ச்சி குறிக்கோளும் இந்தியாவை உயர்விற்குக் கொண்டு செல்லும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.
மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும், தேவையற்ற அரசு தலையீட்டை நீக்கும், வேகமான சீர்திருத்தங்களை கொண்ட சட்டங்கள் இங்கு உருவாக வேண்டும். அரசு இல்லாத நிலை போலவோ அல்லது அதிக தலையீடு போலவோ இரண்டுமே நடக்கக்கூடாது.
இந்தியா பயங்கரவாதத்தை முறியடித்துவிட்டது; இப்போது சத்தீஸ்கரும் நக்சல் வன்முறையிலிருந்து முழுமையாக விடுபடும் பாதையில் உள்ளது. ஒரு காலத்தில் நக்சல் தாக்குதலுக்குப் பெயர் பெற்ற மாநிலமான சத்தீஸ்கர், இன்று நிலைத்தன்மை, பாதுகாப்பு, முன்னேற்றம் ஆகியவற்றின் சின்னமாக திகழ்கிறது. நக்சல் பகுதியில் இப்போது வளர்ச்சி அலைவும் மக்களின் புன்னகையும் காணப்படுகிறது. சத்தீஸ்கர் மக்களுடைய உழைப்பு, தொடர்ச்சியாக ஆட்சி செய்த பாஜக அரசுகளின் தொலைநோக்கு நடவடிக்கைகள் இந்த மாற்றத்துக்கு வழிவகுத்தன.
இந்தியா ஜனநாயகத்தின் தாய் நிலம். நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோல், பாரம்பரியத்தின் பெருமையை காட்டுகிறது. பாரம்பரியமும் முன்னேற்றமும் ஒன்றாக இணைந்து, நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. 2047க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் சத்தீஸ்கர் முக்கிய பங்களிப்பு வழங்கும்” என அவர் தெரிவித்தார்.