தேசிய சப்-ஜூனியர் ஸ்குவாஷ்: அரிஹந்த், அனிகா சாம்பியன்கள்
சென்னையில் நடைபெற்ற தேசிய சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் ஸ்குவாஷ் போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கே. எஸ். அரிஹந்த் மற்றும் மகாராஷ்டிராவின் அனிகா துபே சாம்பியன் பட்டம் வென்றனர்.
19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு இறுதியில் முதலிடம் பெற்ற அரிஹந்த், உத்தரபிரதேச வீரர் யுஷா நபீஸை 11-8, 12-10, 10-12, 11-5 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றினார்.
பெண்கள் பிரிவில், அனிகா துபே 11-5, 11-8, 11-8 என்ற நேரடி செட்களில் அகான்ஷா குப்தாவை முந்தி சாம்பியனானார்.