பழநி விவசாயிகள் ட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளிப்பில் அதிக உழைப்பு!
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பழநி பகுதி விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களின் விதைப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், வயல்களில் மருந்து தெளிப்பதற்காக விவசாயிகள் ட்ரோன் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். வெளிநாடுகளில் போல இங்கும் ட்ரோன் தொழில்நுட்பம் விவசாயத்தில் அதிகரித்து வருகிறது. பழநி சுற்றுவட்டார கிராமங்களில் ட்ரோன்கள் வாடகைக்கு கிடைக்கின்றன.
இரண்டு மூன்று பேர் சேர்ந்து செய்ய வேண்டிய பணியை ட்ரோன் சில நிமிடங்களில் செய்து முடிப்பதால் ட்ரோன்களுக்கு பெரிய டிமாண்ட் உருவாகியுள்ளது.
ட்ரோன் ஆபரேட்டர் அருண் கூறியது:
“நான் தினமும் 4–5 விவசாய நிலங்களில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கிறேன். ஒரு 10 லிட்டர் மருந்துக்கு ₹500 வசூலிக்கிறோம். ஒரு ஏக்கரை 10–15 நிமிடங்களில் முடித்து விடலாம். அதனால் ட்ரோன்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.”
விவசாயி அப்பாசாமி துரை கூறியது:
“தொழிலாளர்கள் குறைவாக இருப்பதால் நேரத்தில் மருந்து, உரம் தெளிக்க சிரமம். ட்ரோன் இதைச் சரிசெய்கிறது. சரியான அளவு மருந்து கிடைப்பதால் பயிர் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. ஒரு முழுநாள் வேலை, ட்ரோன் மூலம் ஒரு மணி நேரத்தில் முடிகிறது. நேரமும் செலவும் மிச்சம். ட்ரோன் பெற முன்பதிவு அவசியமாகி விட்டது.”