சபரிமலை மண்டல தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா நவம்பர் 17ஆம் தேதி ஆரம்பமாகிறது. இதற்கான கோயில் நடை நவம்பர் 16ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது.
பக்தர்கள் கோயிலுக்கு வர சுவாமி தரிசனம் பெற ஆன்லைன் முன்பதிவு கட்டாயம். இந்த முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. தற்போது முன்பதிவு செயலியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தரிசன தேதி மற்றும் நேரத் தேர்வு, காலநிலை தகவல், அவசர உதவி, மருத்துவ சேவை உள்ளிட்ட பல வசதிகளுடன் இந்த புதிய செயலி செயல்படுகிறது என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது