தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,600 குறைவு: ரூ.96,000-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.96,000 ஆக விற்பனையானது.
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, செப்டம்பர் 6 அன்று பவுனுக்கு ரூ.80,040 இருந்தது. பின்னர், அக்டோபர் 14 அன்று ரூ.95,200 வரை உயர்ந்தது. எச்1பி விசா கட்டண உயர்வு, டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு, தங்கத்தில் முதலீட்டின் அதிகரிப்பு போன்றவை விலை உயர்வுக்கு காரணமாக இருந்தன.
ஆனால் நேற்று காலை பவுனுக்கு ரூ.2,000 குறைந்த நிலையில், மாலை நேரத்தில் சிறிய அளவு மீண்டும் ரூ.400 உயர்ந்தது. இதனால் ஒருநாளில் மொத்தமாக பவுனுக்கு ரூ.1,600 குறைவு ஏற்பட்டது. தற்போது 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,000, பவுனுக்கு ரூ.96,000 என விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கம் கிராமுக்கு ரூ.13,091, பவுனுக்கு ரூ.1,04,728 ஆக உள்ளது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.13 குறைந்து ரூ.190 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.13,000 குறைந்து ரூ.1,90,000 ஆகவும் விற்பனையாகிறது.