சத்தீஸ்கர் மதுபான ஊழல் வழக்கு: அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ரூ.2,000 கோடி அளவிலான மதுபான ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேலின் மகன் சைதன்யா பகேல் கைது செய்யப்பட்டார்.
அவரது கைது நடவடிக்கையை எதிர்த்து சைதன்யா பகேல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜோய்மால்யா பக்சி அமர்வு விசாரித்தது.
சைதன்யா பகேலுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர்கள் என். ஹரிகரன் மற்றும் கபில் சிபல் ஆஜராகினர். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தை முன்வைத்து அமலாக்கத் துறை கைது செய்துள்ளது; அதற்கு சட்டபூர்வ ஆதாரம் இல்லை என்பதை வாதாடினர்.
இந்த வாதத்தை கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றம், சைதன்யா பகேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் தாக்கல் செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.