2030-ல் நிலவிற்கு மனிதரை அனுப்ப சீனாவின் திட்டம்
பூமியில் இருந்து சுமார் 425 கிலோமீட்டர் தொலைவில் சீனாவின் தியான்காங் (Tiangong) எனும் விண்வெளி நிலையம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து சீன விண்வெளி நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாங் ஜிங்போ தெரிவித்ததாவது:
சீன விண்வெளி வீரர்கள் ஜாங் லு, வூ பெய் மற்றும் ஜாங் ஹாங் ஜாங் ஆகியோர் நேற்று (வெள்ளிக்கிழமை) பூமியில் இருந்து தியான்காங் விண்வெளி நிலையத்தை நோக்கி பயணம் மேற்கொண்டனர்.
சீனாவின் நிலவு ஆராய்ச்சிப் பணிகள் 2004-ம் ஆண்டில் தொடங்கப்பட்டன. 2007-ம் ஆண்டில் நிலவை ஆராய்ச்சி செய்யும் ரோபோவை அனுப்பிய சீனா, 2020-ம் ஆண்டில் நிலவிலிருந்து 1.7 கிலோ பாறை மற்றும் மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தது. இத்திட்டத்தின் அடுத்த பெரிய படியாக 2030-ம் ஆண்டுக்குள் சீனாவின் விண்வெளி வீரர்கள் நிலவில் இறங்குவார்கள் என அவர் தெரிவித்தார்.