இந்திய உள்கட்டமைப்பில் ரூ.44,000 கோடி முதலீடு செய்யும் டிபி வேர்ல்டு

Date:

இந்திய உள்கட்டமைப்பில் ரூ.44,000 கோடி முதலீடு செய்யும் டிபி வேர்ல்டு

இந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்களில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.44,000 கோடி) முதலீடு செய்வதாக சரக்கு போக்குவரத்து துறையில் செயல்படும் டிபி வேர்ல்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

டிபி வேர்ல்டு குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுல்தான் அகமது பின் சுலேயம் கூறியது வருமாறு:

“இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோக சங்கிலி உட்கட்டமைப்பை மேம்படுத்த இம்முதலீடு செய்யப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வரும் எங்கள் நிறுவனம் இதுவரை 3 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது. தற்போது கூடுதலாக 5 பில்லியன் டாலர் முதலீடு செய்வது, இந்தியாவின் உலக வர்த்தக போட்டித் திறனை உயர்த்தும்.”

அவர் மேலும் தெரிவித்ததாவது:

“இந்த புதிய முதலீடு, இந்தியாவின் கடல்சார் மற்றும் தளவாட துறையை வலுப்படுத்தி, உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் நிலையை மேலும் உயர்த்தும். இது நாங்கள் உருவாக்கும் நீண்டகால வளர்ச்சி கூட்டாண்மையின் ஒரு பகுதியாகும்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஸ்ரீலீலாவுக்கு இணையாக நடனமாட அனுமதி கிடைக்கவில்லை – சிவகார்த்திகேயன் நகைச்சுவை

ஸ்ரீலீலாவுக்கு இணையாக நடனமாட அனுமதி கிடைக்கவில்லை – சிவகார்த்திகேயன் நகைச்சுவை சென்னை வள்ளுவர்...

உத்தராகண்ட் : குடியிருப்புக்குள் புகுந்த கரடிகள் – மக்கள் பீதி

உத்தராகண்ட் : குடியிருப்புக்குள் புகுந்த கரடிகள் – மக்கள் பீதி உத்தராகண்ட் மாநிலம்...

கொந்தளிக்கும் வங்கதேசம் : ஹாடி மரணத்தால் வெடித்த போராட்டமும் வன்முறையும்

கொந்தளிக்கும் வங்கதேசம் : ஹாடி மரணத்தால் வெடித்த போராட்டமும் வன்முறையும் சிங்கப்பூரில் சிகிச்சை...

ஆடு திருட்டில் ஈடுபட்ட இருவரை மரத்தில் கட்டி பொதுமக்கள் தாக்குதல்

ஆடு திருட்டில் ஈடுபட்ட இருவரை மரத்தில் கட்டி பொதுமக்கள் தாக்குதல் கரூர் மாவட்டம்...