பாகிஸ்தானில் ராணுவ நடவடிக்கை: பலுசிஸ்தானில் 18 போராளிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், ராணுவத்தினருடன் நடந்த மோதலில் 18 போராளிகள் கொல்லப்பட்டனர்.
உளவுத் தகவலைத் தொடர்ந்து, குவெட்டா மாவட்டத்தின் சில்டன் மலைப்பகுதி மற்றும் கெச் மாவட்டத்தின் புலேடா பகுதிகளில் புதன்கிழமை இரவு ராணுவம் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.
அப்போது ராணுவத்தினர் மற்றும் பலுசிஸ்தான் போராளிகள் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 18 போராளிகள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
நிகழ்விடத்தில் இருந்து பல்வேறு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.