என்ஆர்ஐ பண பரிமாற்றத்தை வேகப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இந்தியாவில் பணம் அனுப்பும் செயல்முறையை வேகமாக்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக வரைவு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ரிசர்வ் வங்கி தெரிவித்ததாவது:
ஜி20 திட்டத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக எல்லை தாண்டிய பணப் பரிமாற்றங்களை வேகமாக, எளிதாக மற்றும் பாதுகாப்பாக மாற்றுவது உள்ளது. அதனை கருத்தில் கொண்டு பணப் பரிமாற்றத்தின் செயல்திறனை உயர்த்தும் திட்டத்தை RBI முன்மொழிந்துள்ளது.
இதற்கான வங்கிகளின் கருத்துகள் மற்றும் திட்டங்களை 2025 நவம்பர் 19-க்குள் வரவேற்கிறது. வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம் பயனாளியின் கணக்கில் வரவு செய்வதில் எளிமை, வெளிப்படைத்தன்மை, அணுகல் ஆகியவை மேம்படுத்தப்படும்.
பணம் வங்கிக்கு வந்த உடன் பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படும் நேரத்தை குறைப்பது, செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவது மற்றும் சரியான தகவல்களை உடனுக்குடன் வழங்குவது முக்கியம் என RBI தெரிவித்துள்ளது.