பெருமாள் முருகனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட ‘அங்கம்மாள்’ திரைப்படம்
தமிழ் இலக்கிய உலகின் முக்கிய எழுத்தாளரான பெருமாள் முருகனின் சிறுகதை ‘கோடித்துணி’வை தழுவி உருவாகும் புதிய திரைப்படம் ‘அங்கம்மாள்’. ஸ்டோர் பெஞ்ச், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் ஃபிரோ மூவி ஸ்டேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன. சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
படத்தைப் பற்றி எழுத்தாளர் பெருமாள் முருகன் கூறுகையில்,
“கதை எனது என்றாலும், தழுவும் உரிமையை வழங்கிய பிறகு எனது பங்கு முடிந்துவிட்டது. சிறுகதை திரைக்கதையாக மாறும் போது இயல்பாகவே பல மாற்றங்கள் வரும். குறிப்பாக இந்தக் கதையில் கிளைமாக்ஸ் மற்றும் பெண் கதாபாத்திரங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. 25 நிமிட குறும்படக் கதையை முழுநீள திரைப்படமாக ஆழத்துடனும் நுட்பத்துடனும் இயக்குநர் வடிவமைத்துள்ளார்” என்று தெரிவித்தார்.
‘அங்கம்மாள்’ படத்தில் கீதா கைலாசம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சரண், பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு அஞ்சோய் சாமுவேல் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பை முகமது மக்பூல் மன்சூர் மேற்கொள்கிறார்.