தீபாவளி ஷாப்பிங்கில் கிரெடிட் கார்டு பூம்: ரூ.50,000-க்கு மேல் செலவு செய்தோர் அதிகரிப்பு
இந்த ஆண்டைய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஈ–காமர்ஸ் தளங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கான சிறப்பு சலுகைகள், கேஷ்பேக் ஆஃபர்களை அறிவித்தன. இதன் விளைவாக 91% நுகர்வோர் இவ்விழா ஷாப்பிங்கில் கார்டு சலுகைகளைப் பயன்படுத்த திட்டமிட்டிருந்தனர்.
மேலும், 48% பேர் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் சேர்த்து தீபாவளி பொருட்கள் வாங்க முனைந்தனர்.
பைசாபஜார் நடத்திய கணக்கெடுப்பு தகவலின்படி, பெருமளவு மக்கள் கிரெடிட் கார்ட்களைப் பயன்படுத்தி இந்த தீபாவளி கொள்முதல் செய்துள்ளனர். குறிப்பாக 42% நுகர்வோர் ரூ.50,000-க்கும் அதிகமாக செலவழித்துள்ளனர் என்பது முக்கிய முடிவாகும்.
அதேபோல்,
- 22% பேர் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை
- 20% பேர் ரூ.1 லட்சம் மேல்
கிரெடிட் கார்டு மூலம் தீபாவளி ஷாப்பிங் செய்துள்ளனர்.
2,300 பேரிடம் நடத்தப்பட்ட சர்வேயில், அதிகமாக வாங்கப்பட்ட பொருட்களில்,
- ஹோம் அப்ளையன்ஸ்கள் – 25%
- மொபைல் மற்றும் கேட்ஜெட்டுகள் – 23%
- ஆடைகள் – 22%
இடம்பிடித்தன.
சலுகைகள் மற்றும் கேஷ்பேக் ஆஃபர்கள் காரணமாக கிரெடிட் கார்டு பயன்பாடு தொடர்ந்து உயர்ந்து வருவதாக பைசாபஜார் தெரிவித்துள்ளது.