பாரத் பே நிறுவனத்தின் புதிய மனிதவள தலைவராக ஹர்ஷிதா கன்னா நியமனம்
பின்டெக் துறையில் செயல்படும் பாரத் பே நிறுவனத்தில் தலைமை மனிதவள அதிகாரி (CHRO) பதவிக்கு ஹர்ஷிதா கன்னா நியமிக்கப்பட்டுள்ளார். ஹோம் கிரெடிட் இந்தியா, அல்காடெல் லூசென்ட், CSC, ஹெவிட் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்துடன், மனிதவள துறையில் 18 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் அவருக்கு உள்ளது.
இந்த நியமனம் குறித்து பாரத் பே தலைமை செயல் அதிகாரி நலின் நெகி தெரிவித்ததாவது:
“உயர்திறன் கொண்ட பணியாளர்கள் சூழலை உருவாக்குவதில் ஹர்ஷிதா முக்கிய பங்கு வகிப்பார்” என்றார்.
இதற்கிடையில், NIIT நிறுவனத்தின் புதிய CHRO-வாக ஷில்பா துபாவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்பு மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ், வால்மார்ட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், கோகா-கோலா, GSK உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.