பாகிஸ்தான் தாக்குதலில் 3 ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு – பிசிசிஐ கடும் கண்டனம்
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இதை கடுமையாக கண்டித்துள்ளது.
பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:
“பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி ஆப்கானிஸ்தானில் நடத்திய தாக்குதலில் மூன்று ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த கடின நேரத்தில், பிசிசிஐ ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்களின் குடும்பங்களுடன் இணைந்து நிற்கிறது. இந்த தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.”
இந்நிலையில், இந்த தாக்குதலுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தானில் நடைபெறவிருந்த முத்தரப்பு டி20 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
முதலில் பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்க இருந்த இத்தொடரில், தற்போது ஆப்கானிஸ்தானுக்கு பதிலாக ஜிம்பாப்வே அணி பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டி20 முத்தரப்பு தொடர் அடுத்த மாதம் 17-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.