மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு உதவி எண் அறிவிப்பு
தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. மேற்குவங்கத்தில் ஆட்சி செய்யும் திரிணமூல் காங்கிரஸ் அரசு, இந்த செயல்முறைக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த கேள்விகள் மற்றும் புகார்களுக்கு தேர்தல் ஆணையம் சிறப்பு உதவி எண்களை வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்துக்கான உதவி எண் 1950 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு அழைத்து பட்டியல் திருத்தப் பணிக்கு உட்பட்ட கோரிக்கைகள், புகார்கள் தெரிவிக்கலாம். அளிக்கப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் பயன்பாட்டில் உள்ள 1800-11-1950 என்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிலும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். மேலும் complaints@eci.gov.in என்ற மின்னஞ்சலுக்கும் புகார்களை அனுப்பலாம். அதுக்கூடாது மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் நேரடியாகவும் மனுக்கள் சமர்ப்பிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.