இன்று இந்தியா–ஆஸ்திரேலியா 2வது T20 மோதல்
இந்தியா–ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 2வது டி20 போட்டி இன்று மெல்பர்னில் பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெறுகிறது. 5 ஆட்டத் தொடரில் முதல் போட்டி கான்பெராவில் மழையால் ரத்து செய்யப்பட்டது.
முதல்போட்டியில் சூர்யகுமார் யாதவ் (24 பந்து 39 ரன்), ஷுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். அபிஷேக் சர்மா விக்கெட் இழந்தாலும் இன்று மீண்டும் வலுவாக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திலக் வர்மா, ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோரும் ரன் சேர்க்கக்கூடியவர்கள்.
பந்துவீச்சில் பும்ரா தொடக்க ஓவர்களில் அழுத்தம் கொடுக்கலாம். அக்சர், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் ஆகிய சுழல் வீரர்கள் நடு ஓவர்களில் கட்டுப்பாடு கொடுக்க முயற்சிப்பார்கள்.
ஆஸ்திரேலியா அணியில் மார்ஷ், ஹெட், டிம் டேவிட், இங்லிஷ், ஸ்டாயினிஸ் உள்ளிட்டோர் இந்திய பந்துவீச்சுக்கு சவால் விடக்கூடியவர்கள். பந்துவீச்சில் ஹேசில்வுட், பார்ட்லெட், குனேமன், நேதன் எலிஸ் முக்கிய பங்கு வகிக்கலாம்.
மெல்பர்னில் மழை வாய்ப்பு இருப்பதால் போட்டி பாதிக்கப்படலாம். இதுவரை போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று முடிந்துள்ளதால் 90 ஆயிரம் ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்ட நேரம்: பிற்பகல் 1.45
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2