‘இப்படிப் பயணம் செய்ய வேண்டிய நிலையே அவலம்’ — கிரெட்டா தன்பெர்க் வருத்தம்
காசா மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு கடல் மார்க்கமாக சென்ற செயற்பாட்டாளர்கள் மீது இஸ்ரேல் எடுத்த நடவடிக்கையைப் பற்றி, சூழலியல் போராளி கிரெட்டா தன்பெர்க் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
பார்சிலோனாவில் இருந்து 50 படகுகளில் காசாவுக்கு உதவி கொண்டு சென்ற குழுவில் கிரெட்டா தன்பெர்க் உட்பட சுமார் 500 பேர் இருந்தனர். இஸ்ரேல் கடற்படை அவர்கள் பயணத்தைத் தடுக்க, பலரை கைது செய்தது. பின்னர் கிரெட்டா உள்பட 160 பேர் கிரீஸுக்கு நாடுகடத்தப்பட்டனர். ஏதென்ஸ் விமான நிலையத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது பேசிய கிரெட்டா,
“நிவாரணப் பொருட்களை அனுப்ப கூட கடல் வழியாக ரகசிய முயற்சி எடுக்க வேண்டிய சூழல் உலகத்தில் ஏற்பட்டதே ஒரு அவலம். இஸ்ரேலின் கொடூர செயல்களைத் தடுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும். ஆனால் அரசுகள் செயல்படவில்லை,” என கூறினார். மேலும் பாலஸ்தீனக் கொடியுடன் “பாலஸ்தீனத்திற்கு விடுதலை வேண்டும்” என்று முழங்கினார்.
ஃப்ளோட்டிலா பயணிகளுக்கான நடத்தை குறித்து, “எங்களை மிருகங்களைப் போல நடத்தினர்; உணவும் தண்ணீரும் தரவில்லை,” என ஒருபட்டியலாளர் குற்றஞ்சாட்டினார். இஸ்ரேல் இதை மறுத்துள்ளது.