சந்தா முறையில் ஸ்மார்ட்போன் வழங்கும் BytePe — என்ன புதியது?
இந்தியாவில் முதல் முறையாக, ஸ்மார்ட்போன்களை சந்தா அடிப்படையில் வழங்கும் திட்டத்தை BytePe என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே போனை நீண்டகாலம் பயன்படுத்துவது அல்லது பெரிய தொகை இஎம்ஐ செலுத்துவது போன்ற சிரமங்களை தவிர்க்கும் முயற்சியாக இந்த சேவையை தொடங்கியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்பிள், சாம்சங், விவோ, ரியல்மி, மோட்டோ போன்ற நிறுவனங்கள் அடிக்கடி புதிய மாடல்களை வெளியிடுகின்றன. ஆனால் பயனர்கள் அடிக்கடி புதிய போன்களுக்கு மாற முடியாத சூழ்நிலையில், BytePe இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக செயல்படப் போகிறது.
நிறுவனர் ஜெயந்த் ஜா தெரிவித்ததாவது:
“பழைய மாடல் ஸ்மார்ட்போனில் சிக்கி போவது, நீண்டகால இஎம்ஐ சுமை போன்றவற்றிற்கு மாற்றான தீர்வாக BytePe உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஸ்மார்ட்போன் சேவை; பின்னர் பல மின்னணு சாதனங்கள் சேர்க்கப்படும்” என்றார்.
இந்த சந்தா முறை எப்படி வேலை செய்கிறது?
- BytePe தளத்தில் விருப்பமான ஸ்மார்ட்போனை தேர்வு செய்யலாம்
- மாதாந்திர சந்தா கட்டணம் செலுத்தி 12 மாதங்கள் பயன்படுத்தலாம்
- 12 மாதங்கள் முடிந்ததும்
- புதிய மாடலுக்கு அப்க்ரேட் செய்யலாம் அல்லது
- அதே போனை மேலும் 12 மாதங்கள் தொடரலாம்
 
- டேமேஜ் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது
எந்த போன்கள்? எவ்வளவு?
தற்போது ஆப்பிள் iPhone 17 மொடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
iPhone 17 மாத சந்தா ரூ.3,455 முதல்.
கிரெடிட் கார்ட் அல்லது Cardless முறையில் கிடைக்கும்.
எங்கு கிடைக்கும்?
- முதற்கட்ட சேவை: டெல்லி, பெங்களூரு
- விரைவில் இந்தியாவின் பிற நகரங்களுக்கு விரிவு செய்யப்படும்
மேலும் சாம்சங், ஒன்பிளஸ் போன்களும் கிடைக்கின்றன. இந்த புதிய முறை, ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஈர்ப்பாக இருக்கும் என BytePe நம்புகிறது.