பாகிஸ்தானை தென் ஆப்பிரிக்கா அணி தோற்கடித்தது
ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி–20 போட்டியில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் களமிறங்கி பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா, 9 விக்கெட்களை இழந்து 194 ரன்கள் எடுத்தது. ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 60 ரன்களுடன் சிறந்தார். ஜார்ஜ் லிண்டே 36, டோனி டி ஸோர்ஸி 33, குயிண்டன் டி காக் 23 ரன்களுடன் பங்களித்தனர்.
பின்னர் இலக்கு 195 ரன்களை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி, 18.1 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்–அவுட் ஆனது. சைம் அயூப் 37, முகமது நவாஷ் 36, சாஹிப்ஸதா பர்ஹான் 24 ரன்கள் எடுத்தனர். பிற வீரர்கள் இரட்டை இலக்கத்தை கூட எட்ட முடியவில்லை.
தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சில் கார்பின் போஷ் 4 விக்கெட்களும், ஜார்ஜ் லிண்டே 3, லிஸாத் வில்லியம்ஸ் 2 விக்கெட்களும் எடுத்தனர்.
இதனால், 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1–0 முன்னிலை பெற்றுள்ளது.