சீயான் 63’ படம் — புதுமுக இயக்குநருடன் விக்ரம் கூட்டணி!

Date:

‘சீயான் 63’ படம் — புதுமுக இயக்குநருடன் விக்ரம் கூட்டணி!

அறிமுக இயக்குநருடன் நடிகர் விக்ரம் தனது 63வது படத்தில் இணைகிறார்.

‘வீர தீர சூரன்’ படத்திற்கு பிறகு விக்ரம் பல திட்டங்களில் இணைகிறார் என செய்திகள் வெளியானது. முதலில் ‘மெய்யழகன்’ பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார் என கூறப்பட்டது; ஆனால் அந்த திட்டம் நடக்காமல் போனது. அதேபோல் ‘மண்டேலா’ இயக்குநர் மடோன் அஸ்வினின் படத்திலும் நடிக்கிறார் என தகவல் பரவிய நிலையில் அது குறித்து பின்னர் எந்த அப்டேட்களும் வெளிவரவில்லை. இதனால் விக்ரமின் அடுத்த படம் குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில், விக்ரமின் 63வது படம் அதிகாரப்பூர்வமாக முன்னேறியுள்ளது. அருண் விஷ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் தயாரிக்கும் இந்த படத்தை போடி ராஜ்குமார் எனும் புதிய இயக்குநர் இயக்க உள்ளார். இவர் இதற்கு முன் எந்த இயக்குநரின் உதவியாளராகவும் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘சீயான் 63’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தகவல்.

இந்த படத்துக்குப் பிறகு விஷ்ணு எடவன் இயக்கும் படத்திலும் விக்ரம் நடிக்கிறார். அதை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது; அனிருத் இசையமைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழகத்தைச் சேர்ந்த 5 அதிகாரிகள் ஐஏஎஸ் பதவி உயர்வு

தமிழகத்தைச் சேர்ந்த 5 அதிகாரிகள் ஐஏஎஸ் பதவி உயர்வு தமிழக மாநில அரசு...

நில அளவையர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை

நில அளவையர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை தமிழ்நாடு நில அளவை அலுவலர்...

ஜெமிமா ரோட்ரிக்ஸ் சாதனை – உலகக் கோப்பை அரையிறுதி அதிரடியான தருணங்கள்

ஜெமிமா ரோட்ரிக்ஸ் சாதனை – உலகக் கோப்பை அரையிறுதி அதிரடியான தருணங்கள் மும்பை...

பிஹார் மக்களை திமுக துன்புறுத்துகிறது என்ற பிரதமரின் குற்றச்சாட்டு உண்மையே” – அண்ணாமலை பதில்

“பிஹார் மக்களை திமுக துன்புறுத்துகிறது என்ற பிரதமரின் குற்றச்சாட்டு உண்மையே” –...