இந்தியா ‘ஏ’ – தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இன்று டெஸ்ட் ஆட்டத்தில் மோதுகின்றன.
தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி, இந்தியா ‘ஏ’ அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறும் தொடருக்காக தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் இன்று காலை 9.30 மணிக்கு பெங்களூருவில் துவங்குகிறது.
4 நாள் டெஸ்ட் என நடத்தப்படும் இந்தப் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணியை ரிஷப் பந்த் வழிநடத்துகிறார். விக்கெட் கீப்பரும், துடுப்பாட்டக்காரருமான ரிஷப் பந்த், சுமார் 3 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களமிறங்க உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள பிரதான டெஸ்ட் தொடருக்கான தயாரிப்பாக, இந்த இரு டெஸ்டுகளையும் ரிஷப் பந்த் சிறந்த முறையில் பயன்படுத்தக் கூடும்.