லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வாமிகா நாயகி
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில், நடிகை வாமிகா நாயகியாக இணைந்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தொடங்கப்பட்டு, படப்பிடிப்பு தற்போது சென்னையில் வேகமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் லோகேஷ் உடன் யார் நடிக்கிறார்கள் என்பதில் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. தற்போது வாமிகா இந்தப் படத்தில் நாயகியாக தேர்வானதாகவும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படம் பிடிக்கப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாமிகா முன்னதாக தமிழில் ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் நடித்துள்ளார். மேலும், ‘இறவாக்காலம்’ மற்றும் ‘ஜீனி’ என்ற இரு படங்களிலும் அவர் நடித்துள்ளார், அவை இன்னும் வெளியீட்டை காத்திருக்கின்றன.
இந்த படத்தின் பணிகள் முடிந்ததுடன், லோகேஷ் மீண்டும் இயக்கத்திற்கு திரும்பவுள்ளார். ரஜினி–கமல் இணையும் படத்தை அவர் இயக்கமாட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது அடுத்த படத்தின் நாயகன் குறித்து இன்னும் முடிவாகவில்லை.