சென்னையில் தங்க விலை மாற்றம்: காலை சரிவு – மாலை உயர்வு
சென்னையில் இன்று (அக். 30) தங்க விலை இரண்டு மாறுபட்ட நிலையில் காணப்பட்டது. காலை நேரத்தில் குறைந்த தங்க விலை, மாலைக்குள் மீண்டும் உயர்ந்தது.
காலைப்பொழுதில், ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.11,100-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.88,800-க்கும் விற்பனையானது.
ஆனால் மாலை நேரத்தில், தங்கம் விலை மீண்டும் உயர்ந்து சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்து ரூ.90,400-ஆக மாற்றியது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேசமயம், வெள்ளி விலையில் சிறிய தாழ்வு பதிவாகி, கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.165-க்கு விற்பனையாகிறது.