இளம் கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவை பாராட்டிய சிரஞ்சீவி
ஆசியக் கோப்பையில் சிறப்பாக விளையாடியதற்காக இளம் கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவை நடிகர் சிரஞ்சீவி நேரில் அழைத்து பாராட்டினார்.
அனில் ரவிப்புடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் ‘மன சங்கர வர பிரசாத் காரு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்திலேயே சிரஞ்சீவி, திலக் வர்மாவை சந்தித்து கவுரவித்தார்.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் திலக் வர்மாவின் ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இதனை நினைவுகூர்ந்து சிரஞ்சீவி அவருக்கு சால்வை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.
அப்போது பேசிய சிரஞ்சீவி, திலக் வர்மாவின் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, அஞ்சாத மனநிலை ஆகியவற்றை பாராட்டி, அவரிடமிருந்து எதிர்காலத்தில் இன்னும் பல சிறப்பான ஆட்டங்களை எதிர்நோக்குவதாக கூறினார்.
இந்த நிகழ்வில் இயக்குநர் அனில் ரவிப்புடி, நடிகை நயன்தாரா மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.