இந்தியில் ரீமேக் ஆகும் ‘அருந்ததி’ – ஸ்ரீலீலா நாயகி!
தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அருந்ததி’ படம், இப்போது அதிகாரப்பூர்வமாக இந்தியில் ரீமேக் ஆகிறது.
2009ல் அனுஷ்கா நடிப்பில், கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. ₹13 கோடி செலவில் தயாரான இந்த படம், ₹70 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
பல ஆண்டுகளாக இந்தி ரீமேக் முயற்சிகள் நடைபெற்றாலும் நடிகை தேர்வு காரணமாக படம் முடியாமல் இருந்தது. ஆரம்பத்தில் தீபிகா படுகோன், கரீனா கபூர் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் இதில் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இப்போது ரீமேக் பணிகள் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. இப்படத்தை மோகன் ராஜா இயக்கவுள்ளார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனுஷ்கா நடித்த கதாபாத்திரத்தில் தற்போது பாலிவுட்டில் பிரபலமடைந்து வரும் ஸ்ரீலீலா நடிக்கிறார். இது இவரின் முதல் முழுமையான நாயகி மையப்படமான இந்தி படம் ஆகும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.