“2 இளவரசர்கள், 2 ஊழல் குடும்பங்கள்” – ராகுல், தேஜஸ்வியை குறிவைத்து பிரதமர் மோடி கடும் விமர்சனம்
பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆர்ஜேடி தலைவரான தேஜஸ்வி யாதவுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
முசாபர்பூர் நடைபெற்ற கூட்டத்தில் அவர் கூறியதாவது:
“பிஹார் தேர்தலில் வெற்றி பெற இரண்டு இளவரசர்கள் பொய் வாக்குறுதிகளைப் பரப்புகிறார்கள். இவற்றில் ஒருவர் நாட்டிலேயே ஊழல் புகழ் மிகுந்த குடும்பத்தின் வாரிசு. மற்றவர் பிஹாரில் அதிக ஊழலில் சிக்கிய குடும்பத்தின் வாரிசு. இருவருக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இப்படிப்பட்டவர்கள் இப்போது ஜாமீனில் வெளியே வந்து சுற்றுகிறார்கள்,” என மோடி தாக்குதல் நடத்தினார்.
அதையடுத்து அவர் மேலும் கூறினார்:
சாத் பண்டிகை பிஹாரின் தனிச்சிறப்பு என்று குறிப்பிட்டு, அதை யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்க முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார். சாத் தேவியை அவமதிப்பதாக அவர் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகளை மக்கள் தண்டிக்க வேண்டுமெனவும் கூறினார்.
பிஹாரின் வளர்ச்சிக்கான அவசியம், தொழில் முன்னேற்றம் மற்றும் சட்டம்–ஒழுங்கு குறித்து பேசும்போது, காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியின் ஆட்சியில் ஊழல், மோசடி, சட்டமின்மை மட்டுமே இருந்ததாக சாடினார்.
பிஹாரின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பாஜக–தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமே மாற்றத்தை கொண்டுவர முடியும் எனவும், லாந்தர் சின்னம் (ஆர்ஜேடி) கொண்டவர்கள் வளர்ச்சியை நிறுத்துவார்கள் எனவும் கடும் விமர்சனம் செய்தார்.