விஜய் ரசிகர் கதாபாத்திரத்தில் சவுந்தரராஜா!
பள்ளி மாணவர்கள் தவறான பாதையில் செல்லும் சூழலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் ‘ராம் அப்துல்லா ஆண்டனி’. இயக்குநர் ஜெயவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் சவுந்தரராஜா, பூவையார், சாய் தீனா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் நாளை வெளியாகிறது. இதில் போலீஸ் அதிகாரியாக சவுந்தரராஜா நடித்துள்ளார்.
படம் குறித்து அவர் கூறும்போது,
“பள்ளிப் பருவ சிறுவர்கள் எப்படி எதிர்பாராமல் வன்முறையிலே சிக்கிக்கொள்ளுகிறார்கள்? அதற்குக் காரணம் என்ன? என்ற கேள்விக்கு பதில் தரும் கதை இது. இந்தப் படத்தில் நான் விஜய் ரசிகராக நடிக்கிறேன். படத்தில் ஒரு பெரிய ட்விஸ்ட் இருக்கும். ரசிகர்கள் நிச்சயம் விரும்பிப் பார்ப்பர்.
நான் நடித்த ‘சாயாவனம்’ படம் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. அடுத்து ‘வயலன்ஸ்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளேன். மலையாளத் திரைப்படத்திலும் தற்போது நடிக்கிறேன். இதுவரை நான் செய்யாத வகை கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை” என்றார்.