‘ஜெயிலர் 2’வில் ரஜினியுடன் வித்யா பாலன் முக்கிய வேடத்தில்
ரஜினிகாந்த் நடித்துவரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வித்யா பாலன் இணைந்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து கோவாவில் சில அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல்.
முதல் பாகத்தில் இல்லாத சில புதிய முகங்களும் இந்த தொடர்ச்சிப் படத்தில் ரஜினியுடன் நடிக்கின்றனர். இதில் எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டவர்கள் சேர்ந்து நடித்துவருகின்றனர். அதே வரிசையில் வித்யா பாலனும் புதியதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, சென்னை மற்றும் கோவா தளங்களில் அவருடைய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அவருடைய மனைவியாக நடித்தது தமிழ் ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக திகழும் வித்யா பாலன், ‘ஜெயிலர் 2’ மூலம் மீண்டும் தமிழ் திரைக்கு வருகிறார். சமீபத்தில் தென்னிந்திய கலாசாரத்தை வெளிப்படுத்தும் வித்யா பாலனின் ரீல்ஸ் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.