2025 சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து பி.வி. சிந்து விலகல்
2 முறை ஒலிம்பிக் பதக்கத்தை கைப்பற்றிய இந்திய பாட்மிண்டன் நட்சத்திரமான பி.வி. சிந்து, காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாக சிகிச்சை பெற கவனம் செலுத்துவதற்காக 2025 சீசனில் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது:
“என் பயிற்சி குழுவினருடன் ஆலோசனை செய்ததின் பின்னரும், டாக்டர் பர்திவாலாவின் மருத்துவ ஆலோசனையின் அடிப்படையிலும், 2025-ம் ஆண்டில் நடைபெற உள்ள பிடபிள்யூஎஃப் டூர் போட்டிகளில் விளையாடாமல் இருப்பதே சிறந்த முடிவு என தீர்மானித்தோம்.
ஐரோப்பிய சுற்றுப் போட்டிகள் ஆரம்பிக்க உள்ள நிலையில், என் காலில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையாததால் இத்தீர்மானம் எடுத்தேன். காயங்கள் ஒவ்வொரு விளையாட்டு வீரரின் பயணத்திலும் தவிர்க்க முடியாததுதான். அவை பொறுமையையும் மனத்திண்மையையும் சோதிக்கின்றன. ஆனால் அவை மீண்டு இன்னும் வலிமையாக திரும்புவதற்கான உந்துதலையும் அளிக்கின்றன,” என சிந்து தெரிவித்துள்ளார்.