‘விக்ரம் 63’ புதிய அப்டேட்: நாயகியாக மீனாட்சி சவுத்ரி தேர்வு
அடுத்ததாக விக்ரம் நடிக்கும் படத்தில், நாயகியாக மீனாட்சி சவுத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘வீர தீர சூரன்’ படத்துக்கு பிறகு விக்ரமின் அடுத்த படம் குறித்து நீண்ட நாட்களாக நிலவி வந்த எதிர்பார்ப்பு தற்போது முடிவு கண்டுள்ளது. முன்பு மடோன் அஸ்வின், பிரேம் குமார் ஆகியோர் இயக்குநராக ஒப்பந்தமாகி, பின்னர் விலகினர். தற்போது புதிய இயக்குநர் ஒருவரைத் தேர்வு செய்து, அந்த திட்டத்தை விக்ரம் உறுதிசெய்துள்ளார்.
இந்தப் படத்தை சாந்தி டாக்கீஸ் தயாரிக்க உள்ளது. நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் விக்ரமுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கவுள்ளார். கூடுதலாக சத்யராஜ் முக்கிய வேடத்தில் தோன்றவுள்ளார்.
இசையமைப்பாளராக ‘3 BHK’ படத்தில் இசையமைத்த அம்ரித் ராம்நாத் இணைக்கப்படுகிறார். இந்தத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின் படப்பிடிப்பு முழு வேகத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.