இந்திய பணியாளர்களில் சேவைத் துறை பங்கு 30%
இந்தியாவில் வேலை செய்பவர்களில் சுமார் 30% பேர் சேவைத் துறையில் பணிபுரிகின்றனர். நிதி ஆணையம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியதாவது:
கோவிட்-19 பாதிப்பிற்குப் பின்னர், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக சேவைத் துறை செயல்பட்டு வருகிறது. ஆனால் வேலைவாய்ப்பு விரிவாக்கத்தில் இன்னும் சவால்கள் நிலவுகின்றன. இது, பொருளாதாரத்தின் அடிப்படை வடிவமைப்பு மாறும் செயல்முறை இன்னும் மெதுவாக நடைபெறுவதை காட்டுகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளில் மொத்தம் 4 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2011-12 ஆம் ஆண்டில் 26.9% இருந்த சேவைத் துறை வேலைவாய்ப்பு, 2023-24 ஆம் ஆண்டில் 29.7% ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் இது உலக சராசரியான 50% ஐ விட குறைவாகவே உள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.