கனடாவில் இந்திய இளம்பெண் கொலை: சந்தேக நபர் இந்தியாவுக்கு தப்பியோடினாரா? — தேடுதல் வேட்டை விறுவிறுப்பு
பஞ்சாப் மாநிலம் சங்ரூரைச் சேர்ந்த 27 வயதான மன்ப்ரீத் சிங், கடந்த சில ஆண்டுகளாக கனடா டொரொண்டோ அருகிலுள்ள பிராம்ப்டனில் தங்கியிருந்து வந்தார். அங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் பெண் அமன்ப்ரீத் சைனி கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார்.
21ஆம் தேதி லிங்கன் பகுதியில் உள்ள பூங்காவில் அமன்ப்ரீத்தின் உடல் மீட்கப்பட்டது. உடலில் பலத்த காயங்கள் இருப்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது. சம்பவத்துக்குப் பிறகு விசாரணையிலிருந்து தப்பித்துக்கொள்ள மன்ப்ரீத் இந்தியா திரும்பியிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
நயாகரா காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில்,
“இச்சம்பவம் தனிப்பட்ட தகராறு காரணமாக நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. பொதுவெளிக்கு எந்த ஆபத்தும் இல்லை. குற்றவாளியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவர் எங்கும் தெரிய வந்தால் தடுத்து நிறுத்த முயல வேண்டாம்; உடனடியாக 911-க்கு தகவல் அளிக்கவும்”
என்று அறிவுறுத்தியுள்ளது.
சந்தேக நபர் இந்தியாவில் இருப்பதாக நம்பப்படும் நிலையில், கனடா பாதுகாப்பு அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவரைத் தேட உதவி கோரியுள்ளனர்.