நவம்பர் 5-ல் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு — விஜய் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என்று கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில்,
“நம் அரசியல் பயணத்தில் ஒரு ஆழமான அமைதிக்குப் பிறகு மீண்டும் உங்களோடு உரையாடும் தருணம் இது.
சூழ்ச்சிகளும், குற்றச்சாட்டுகளும் நடுவிலும் தைரியமாக நிற்கும் நம் கட்சியினரின் உறுதியை, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு மேலும் வலுப்படுத்தியுள்ளது. நம்மைத் தடுக்க யாராலும் முடியாது என்பதை கடந்த ஒரு மாத காலத்தின் நிகழ்வுகள் தெளிவாக நிரூபித்துள்ளன,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும்,
“கள நிலவரம் உற்சாகமளிப்பதாக இருந்தாலும், அடுத்தடுத்த நடவடிக்கைகளை நிதானமாகவும் திட்டமிட்டும் முன்னெடுக்க வேண்டும். இதற்காக கட்சியின் பொதுக்குழு சிறப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது,” என தெரிவித்துள்ளார்.
அதன்படி, தவெக சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நவம்பர் 5, புதன்கிழமை காலை 10 மணிக்கு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெறும் என விஜய் அறிவித்துள்ளார்.
“வருங்காலம் நமதே. தீர்மானமாக திட்டமிடுவோம் — வெற்றி நிச்சயம்,” என அவர் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.