குறுவைப் பருவத்தில் 11.21 லட்சம் டன் நெல் கொள்முதல் – ரூ.2,709 கோடி வழங்கப்பட்டது: அமைச்சர் அர. சக்கரபாணி
தமிழகத்தில் குறுவைப் பருவ நெல் கொள்முதல் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக உணவுத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “2025–26 குறுவைப் பருவத்தில் இதுவரை 11.21 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1,872 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 2020–21 ஆம் ஆண்டில் இது 5.74 லட்சம் டன் மட்டுமே இருந்தது,” என்று கூறினார்.
மேலும், இதுவரை 1.45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,709 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், தினசரி 30,000 டன் நெல் கொள்முதல் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது:
“சிலர் உண்மை நிலையை அறியாமல் குறைகூறி வருகின்றனர். அரசு நெல் கொள்முதலை நேர்மையாகவும் திறம்படவும் செய்கிறது. விவசாயிகளும் இதனை நன்கு அறிந்துள்ளனர்,” என்றார்.
குறிப்பாக, இதற்கு முன் தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் நடவடிக்கைகளை தவெக தலைவர் விஜய் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.