ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணையை கண்காணிக்க குழு அமைக்க கோரி இடையீட்டு மனு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நடைபெற்று வரும் சிபிஐ விசாரணையை, உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் குழுவின் கீழ் கண்காணிக்க வேண்டும் எனக் கோரி, ஆம்ஸ்ட்ராஙின் மனைவி பொற்கொடி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
பொற்கொடியின் சார்பில் வழக்கறிஞர் ராகுல் ஷியாம் பண்டாரி தாக்கல் செய்த மனுவில்,
“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முழுமையாக நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை பெற வேண்டும். இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து சிபிஐ விசாரணை முன்னேற்றத்தை கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,” என கோரப்பட்டுள்ளது.
மேலும்,
“கொலை வழக்கில் உள்ள முக்கிய சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்; இல்லையெனில் வழக்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது,”
எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.