பிளஸ் 1 மாணவர்களுக்கு விரைவில் இலவச சைக்கிள் விநியோகம் தொடக்கம்

Date:

பிளஸ் 1 மாணவர்களுக்கு விரைவில் இலவச சைக்கிள் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

2025–26 கல்வியாண்டிற்கான மாணவ, மாணவிகளுக்கு அவோன் மற்றும் ஹீரோ நிறுவனங்களிடமிருந்து சைக்கிள்கள் கொள்முதல் செய்ய ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, மாணவிகளுக்கான சைக்கிள் ஒன்றின் விலை ரூ.4,250 என்றும், மாணவர்களுக்கானது ரூ.4,375 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சைக்கிள் விநியோகத்தைத் தொடங்க நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

முதல்வர் இந்தத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கிய பின், மாவட்ட அளவில் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் மூன்று ஆண்டு உத்தரவாத அட்டை வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சைக்கிள்கள் வழங்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் குறைந்தது மூன்று நாட்களுக்கு பழுது நீக்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும். அந்த முகாம்களை சைக்கிள் நிறுவனங்களே ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இளம் டென்னிஸ் வீரர்களை ஊக்குவிக்கும் ‘தி நெக்ஸ்ட் லெவல்’ திட்டம்

இளம் டென்னிஸ் வீரர்களை ஊக்குவிக்கும் ‘தி நெக்ஸ்ட் லெவல்’ திட்டம் சென்னை ஓபன்...

“பேய் கதை எப்போதும் சினிமாவை விட்டு போகாது” – இயக்குநர் சுப்பிரமணிய சிவா

“பேய் கதை எப்போதும் சினிமாவை விட்டு போகாது” – இயக்குநர் சுப்பிரமணிய...

8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கான விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கான விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் மத்திய அரசு...

காசா மீது “உடனடி, சக்திவாய்ந்த தாக்குதல்” – நெதன்யாகு உத்தரவு

காசா மீது “உடனடி, சக்திவாய்ந்த தாக்குதல்” – நெதன்யாகு உத்தரவு ஹமாஸ் அமைப்பு...