ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: நாகாலாந்து திடீர் பதிலடி – நிஸ்சல், லெம்தூர் செஞ்சுரி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் தமிழ்நாடு – நாகாலாந்து அணிகள் பெங்களூருவில் மோதுகின்றன.
முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 115 ஓவர்களில் 3 விக்கெட்களுக்கு 512 ரன்கள் எடுத்தபின் இன்னிங்ஸ் டிக்ளேர் செய்தது.
இதனைத் தொடர்ந்து விளையாடிய நாகாலாந்து அணி, 2ஆம் நாள் ஆட்ட முடிவில் 58 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. தேகா நிஸ்சல் 80 ரன்களும், யுகந்தர் சிங் 58 ரன்களும் சேர்த்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
மூன்றாவது நாள் ஆட்டத்தில், யுகந்தர் சிங் 67 ரன்களில் அவுடானார். பின்னர் இம்லிவதி லெம்தூர் களமிறங்கி சிறப்பாக ஆடியார்.
நாகாலாந்து அணி 127 ஓவர்களில் 5 விக்கெட்களுக்கு 365 ரன்கள் எடுத்தபோது, வெளிச்சம் குறைவதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது தேகா நிஸ்சல் 161 ரன்களுடனும், இம்லிவதி லெம்தூர் 115 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முதல் இன்னிங்ஸில் தமிழ்நாட்டை விட 147 ரன்கள் பின்தங்கிய நிலையில், 5 விக்கெட்கள் கைவசம் வைத்துள்ள நாகாலாந்து அணி இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கியுள்ளது.