தங்கம் விலை தொடர்ச்சியாக சரிவு – வெள்ளி விலையும் குறைந்தது!
சென்னையில் இன்று (அக்டோபர் 28) தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இரண்டும் குறைந்துள்ளன.
22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1,200 குறைந்து, தற்போது ஒரு பவுன் ரூ.90,400 என்றும், ஒரு கிராம் ரூ.11,300 என்றும் விற்பனையாகிறது.
கடந்த ஜனவரியிலிருந்து வேகமாக உயர்ந்த தங்க விலை, சமீப நாட்களாக மெதுவாக குறைந்து வருவது சாமான்ய மக்களுக்கு ஓர் ஆறுதலாக மாறியுள்ளது. “இப்போது தங்கம் வாங்கலாம்” என்ற நம்பிக்கை மீண்டும் உருவாகி வருவதாக வணிகர்கள் கூறுகின்றனர்.
மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,600 வரை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- அக். 26: ரூ.92,000
- அக். 27: ரூ.91,600
- அக். 28: ரூ.90,400
வெள்ளி விலையும் அதே போல் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.165 ஆகவும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,65,000 ஆகவும் விற்பனையாகிறது.