பாலகிருஷ்ணாவின் புதிய படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க ஒப்பந்தம்

Date:

பாலகிருஷ்ணாவின் புதிய படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘அகண்டா 2’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், அதை முடித்தவுடன் கோபிசந்த் மாலினேனி இயக்கும் புதிய படத்தில் நடிக்கத் தயாராகிறார் பாலகிருஷ்ணா. வரலாற்றுப் பின்னணியில், மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இப்படத்துக்காக தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த படத்தில் நாயகியாக நயன்தாராவை அணுகியுள்ள படக்குழு, அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் ‘சிம்ஹா’, ‘ஜெய் சிம்ஹா’ மற்றும் ‘ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ போன்ற படங்களில் பாலகிருஷ்ணா–நயன்தாரா ஜோடி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சதீஷ் கிளரி தயாரிக்கவுள்ள இந்த புதிய படம், பாலகிருஷ்ணாவின் இதுவரை எடுத்த படங்களில் மிகுந்த செலவில் உருவாகும் படமாக கூறப்படுகிறது. இதற்காக ராஜஸ்தானில் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது; இயக்குநர் கோபிசந்த் மாலினேனி தற்போது அந்த இடங்களைத் தேர்வு செய்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வடபழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் – திருத்தணியில் புஷ்பாஞ்சலி விழா சிறப்பாக நடைபெற்றது

வடபழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் – திருத்தணியில் புஷ்பாஞ்சலி விழா சிறப்பாக...

சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் நாள் ஆட்டங்கள் மழையால் ரத்து

சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் நாள் ஆட்டங்கள் மழையால் ரத்து சென்னையில் நுங்கம்பாக்கத்தில்...

தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு தோல்வி...

எல்லை மீறிய போட்டியாளர்கள் – ஏமாற்றம் அளித்த விஜய் சேதுபதி

எல்லை மீறிய போட்டியாளர்கள் – ஏமாற்றம் அளித்த விஜய் சேதுபதி இந்த சீசன்...